ஃபேஸ்புக் சேவையை ஆன்ட்ராய்டு போனில் பயன்படுத்துவோரின் கால் ஹிஸ்ட்ரி, காண்டாக்ட் தகவல்கள் மற்றும் எஸ்எம்எஸ் டேட்டா உள்ளிட்டவற்றை ஃபேஸ்புக் சேகரித்து வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின் இத்தகவல்களை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் உறுதி செய்த நிலையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாய் உள்ளது..
இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரே நோக்கத்திலேயே பயனர்களிடம் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது என ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கல். மேலும் பயனர் தகவல்கள் எதுவும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு விற்கவோ அல்லது பகிர்ந்து கொள்ளப்படவோ இல்லை என்றும் ஃபேஸ்புக் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
இத்துடன் ஆன்ட்ராய்டு போனில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை சேகரிக்கவில்லை என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை ஃபேஸ்புக் சேகரிக்கவில்லை என்றதும், ஃபேஸ்புக் சேகரிக்கும் தகவல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் ஃபேஸ்புக் நம்மிடம் இருந்து சேகரித்து இருக்கும் தகவல்கள் என்ன என்று பார்ப்போம்.,
· முதலில் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து
https://register.facebook.com/download/ எனும் இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்
·
இந்த ஆப்ஷனில் ஜெனரல் அக்கவுன்ட் செட்டிங்ஸ் மெனு காணப்படும், இதில் இருக்கும் Download a copy ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
·
இனி ‘Download your
Information\' பக்கம் திறக்கும், இத்துடன் ‘Share My Archive\' ஆப்ஷனும் காண முடியும். இதனை கிளிக் செய்ததும் உங்களது தகவல்களை டவுன்லோடு செய்யும் பணிகள் நடைபெற்று ‘Download Archive\' ஆப்ஷன் திரையில் தோன்றும்.
· உங்களது தகவல்கள் அனைத்தும் .zip ஃபைல் வடிவில் டவுன்லோடு செய்யப்படும். இங்கிருந்து ஃபைல்களை எக்ஸ்டிராக்ட் செய்ய வேண்டும். இனி ப்ரோஃபைல் புகைப்படத்தின் கீழ் காணப்படும் HTML மற்றும் contact_info ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.
· அடுத்து உங்களின் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் விவரங்களை பார்க்க முடியும்.
இந்த தகவல்களில் ஃபேஸ்புக்கின் விளம்பர பிரிவில் இருந்து பெற்று விளம்பரதாரர்கள் பயன்படுத்தும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.

ஃபேஸ்புக் உங்களின் தகவல்களை சேகரிப்பதை தடுப்பது எப்படி?
ஃபேஸ்புக் உங்களது தகவல்களை டேட்டா சின்க் ஆன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சேகரிக்கும். அந்த வகையில் டேட்டா சேகரிக்கப்படுவதை தடுக்க ஃபேஸ்புக் உங்களின் கான்டாக்ட்களுடன் சின்க் ஆவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு செய்ய ப்ரோஃபைல் புகைப்படத்தை (Profile Picture) கிளிக்செய்ய வேண்டும். இனி People மற்றும் Synced Contacts ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ஃபேஸ்புக் லைட் பயனர்கள் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து ஆப் செட்டிங்ஸ் -- கன்டினிவஸ் கான்டாக்ட் அப்லோடு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து சின்க் கால் மற்றும் டெக்ஸ்ட் ஹிஸ்ட்ரி ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.
Comments
Post a Comment